புரோ கபடி 2018: குஜராத், பெங்களூர் அணிகள் வெற்றி

Last Modified புதன், 12 டிசம்பர் 2018 (23:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று
வரும் புரோ கபடி போட்டிகளின் இந்த ஆண்டு போட்டிகள் கடந்த 10 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் குஜராத் அணி, ஹரியானா அணியுடன் மோதியது. இந்த போட்டியின் பெரும்பான்மையான நேரங்களில் குஜராத் அணியின் கை ஓங்கியிருந்த நிலையில் குஜராத் அணி 47-37 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 37-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னாவுடனும், புனே அணி ஜெய்ப்பூர் அணியுடனும் மோதவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :