ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (16:09 IST)

10 விக்கெட் எடுத்து சாதனை படைத்த வீரரைக் கழட்டிவிட்ட நியுசிலாந்து அணி!

நியுசிலாந்து அணி ஜனவரி 1 முதல் பங்களாதேஷ் அணியுடனான தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான நியுசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் சமீபத்தில் கான்பூர் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஸ் படேல் நீக்கப்பட்டுள்ளார். நியுசிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பதால் சுழல்பந்து வீச்சாளரான அஜாஸ் உட்காரவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நியுசிலாந்து அணி:-
டாம் லேதம், டாம் பிளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிகலஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சவுதீ, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வில் யங்.