திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (09:13 IST)

ஆஷஷ் தொடர்: வெற்றி பெறும் நிலையில் ஆஸ்திரேலிய அணி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
 
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பதும் இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 236 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி வெற்றி பெற 468 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய விளையாடி வருகிறது
 
சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 386 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே கைவசம் வைத்திருப்பதால் அந்த அணி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்
 
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது