ஃபீல்டிங் செய்ய ஆள் இல்லை – பயிற்சியாளரே இறங்கி வந்த ருசிகரம் !
பயிற்சியாளர் லூக் ரோஞ்சி களத்தில் பீல்ட் செய்த போது
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளரே களத்துக்கு வந்த பீல்ட் செய்தது பரபரப்பை கிளப்பியது.
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆக்லாந்தில் நடந்தது,. இந்த போட்டியின் போது இந்திய அணி பேட் செய்யும் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நியுசிலாந்து அணியின் வீரர் ஒருவர் காயமாகி களத்தை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்க வேண்டும். ஆனால் நியுசிலாந்து அணியின் பென்ச்சில் உள்ள கேன் வில்லியம்சன், கூகளின் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் வேறு ஆள் இல்லாத நிலையில் அந்த அணியின் உதவி பீல்டிங் பயிற்சியாளர் லூக்கி ரோஞ்ச் களத்துக்கு வந்தார். இந்த சம்பவத்தை ரசிகர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இதற்கு முன்னதாக இதுபோல இங்கிலாந்து பயிற்சியாளர் காலிங்வுட் பீல்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.