வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (10:07 IST)

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டுள்ளது முக்கியக் கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் ஒரு போட்டி முடிந்த போது கே எல் ராகுலை, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடுமையாக பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் அதன் பின்னர் ராகுலை சந்தித்து சஞ்சீவ் கோயங்கா பேசியதால் இருவரும் சமாதானம் ஆகியதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரைக் கழட்டி விட்டுள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுல் மீண்டும் ஆர் சி பி அணியில் எடுக்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. கோலிக்குப் பின்னர் அந்த அணிக்கு ஒரு நட்சத்திர வீரராக அவர் இருப்பார் என்பதாலும், அவரின் சொந்த ஊர் பெங்களூர் என்பதும் அதற்கு முக்கியக் காரணம்.

இந்நிலையில் பெங்களூர் அணிக்காக விளையாடியது பற்றி பேசியுள்ள கே எல் ராகுல் “நான் 2013 ஆம் ஆண்டு பெங்களுர் அணிக்காக ஒப்பந்தம் ஆனேன். 2016 ஆம் ஆண்டு நாங்கள் கடைசி இடத்தில் இருந்து முன்னேறி இறுதிப் போட்டி வரை வந்தோம். அந்த போட்டியில் நானோ கோலியோ இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தால் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கும். அந்த ஒரு போட்டி குறித்து இன்னமும் நானும் கோலியும் பேசிக்கொண்டிருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.