37வது பிறந்தநாளை கொண்டாடும் மிஸ்டர் கூல் தோனி!

Last Modified சனி, 7 ஜூலை 2018 (10:33 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வீக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேன்களில் ஒருவருமான முன்னாள் கேப்டன் மிஸ்டர் கூல் தோனி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 
 
2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 
 
சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். 


 
தோனியின் பிறந்தநாளில் பல கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இங்கிலாந்தில் உள்ள தோனி தனது குடுபத்தினரோடு தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 


 
தோனியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறது. மேலும், #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
இதில் மேலும் படிக்கவும் :