ஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் தோனியின் மகள் (வீடியோ)

z
Last Modified சனி, 30 ஜூன் 2018 (16:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தோனியின் மகள் ஷிவாவை உற்சாகப்படுத்தும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
 
நேற்று நடைபெற்ற போட்டியில் பாண்டியா அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 4 சிக்சர், 1 பவுண்டரிகள் அடக்கம்.
 
இநிந்லையில், பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு ஒரு சியர் லீடர் கிடைத்து விட்டார் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தோனியின் மகள் ஷிவா, கம் ஆன் ஹர்திக் கம் ஆன் என குழந்தைக்குரலால் உற்சாகப்படுத்துகிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது


webdunia

இதில் மேலும் படிக்கவும் :