10 வருட யுவராஜ் சாதனையை ஒரே பந்தில் தவறவிட்ட மில்லர்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 30 அக்டோபர் 2017 (18:05 IST)
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தல் வெற்றி பெற்றது. 

 
 
போட்டின் போது தென் ஆப்ரிக்க வீரர் மில்லர் வங்கதேச பவுளர்களுக்கு தண்ணி காட்டினார். 10 வது ஓவரில் களமிறங்கிய மில்லர், வேகப்பந்து வீச்சாளர் முகமது சைபுதீனின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
 
19 ஆம் ஓவரில் பவுள் செய்த முகமது சைபுதீனின் 6 பந்துகளில் தொடர்ந்து 5 சிக்சர்களை பறக்கவிட்டார். அவர் ஆடிய வேகத்திற்கு 6 வது பந்தையும் சிக்சராக்கி யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்தனர். 
 
ஆனால், கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். மில்லர் 35 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். 
 
இது குறித்து மில்லர் கூறியதாவது, சைபுதீனின் பந்துவீச்சில் நான்கு சிக்சர்களை அடித்த பின்தான், ஆறு சிக்சர்களை அடிக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் ஐந்து சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது என தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :