வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (17:43 IST)

சிறுமியை பலாத்காரம் செய்த நபரை சுட்டுக்கொன்ற கும்பல்!

சிறுமியை பலாத்காரம் செய்த நபரை சுட்டுக்கொன்ற கும்பல்!

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 43 வயது நபரை மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய அரசால் தடை செய்யப்பட்ட கும்பல் ஒன்று நடு ரோட்டில் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.


 
 
கடந்த 2013-ஆம் ஆண்டு உறவினர் ஒருவரின் மகளை ஐரோம் போபோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
 
இந்நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலின் தேரா புக்ரம்பர் லெய்ராக் பகுதிக்கு திடீரென காரில் இருந்து இறங்கிய ஆயுதம் ஏந்திய கும்பல், காரில் இருந்து கண்களை கட்டிய நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த அந்த நபரை கீழே இழுத்துப் போட்டு துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
 
சுடப்பட்டு படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அரசால் தடை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த தேசிய விடுதலை முன்னணியின் ஆயுதம் ஏந்தியய அமைப்பை சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு தனிநாடு கோரிக்கைக்காக ஆயுதம் ஏந்தி போராடி வருவதால் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.