டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை அணிக்கு மேலும் ஒரு வெற்றி

Last Modified புதன், 25 ஜூலை 2018 (23:40 IST)
திண்டுக்கல் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டி ஒன்றில் காஞ்சி அணியை மதுரை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற காஞ்சி அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. தலைவர் சற்குணம் 62 ரன்களும் ரோஹித் 32 ரன்களும் எடுத்தனர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சி அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. விஷால் வைத்யா 31 ரன்களும், மோஹித் ஹரிஹரன் மற்றும் சஞ்சய் யாதவ் தலா 34 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் திண்டுக்கல் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :