திண்டுக்கல் அணிக்கு மேலும் ஒரு வெற்றி: தூத்துகுடியை வீழ்த்தியது
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தூத்துகுடி மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. திண்டுக்கல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் களமிறங்கிய தூத்துகுடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சதீஷ் மிக அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். மேலும் ரங்கராஜன் 37 ரன்களும், தினேஷ் 24 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி களமிறங்கியது. இந்த அணியின் விவேக் 32 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதையை நோக்கி கொண்டு சென்றார். அதேபோல் இந்த அணியின் முகம்மது பொறுப்புடன் விளையாடி 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் திண்டுக்கல் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கள் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தை மீண்டும் தக்க வைத்து கொண்டது.