Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

142 ரன்களில் சுருண்டது ராஜஸ்தான்: கொல்கத்தா அபாரம்

Last Modified செவ்வாய், 15 மே 2018 (21:46 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 49வது போட்டி இன்று கொல்கத்தாவில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால், ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது
ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் திரிபாதி மற்றும் பட்லர் ஆகியோர் ஓரளவுக்கு அடித்து ஆடினாலும், அவர்களுக்கு பின்வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 19 ஓவரகளில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் பட்லர் 39 ரன்களும், திரிபாதி 27 ரன்களும், உனாகட் 26 ரன்களும் எடுத்துள்ளனர்.

கொல்கத்தா அணியை பொருத்தவரையில் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ரஸல் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ஷிவம் மவி, நரேன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றி பெற 143 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :