செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (22:12 IST)

மும்பை இந்தியன்ஸ் அபார பேட்டிங்: 211 இலக்கை தொடுமா கொல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41வது போட்டியான மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது மும்பை
 
மும்பை அணியின் இஷான் கிஷான் அபாரமான பேட்டிங்கால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் 62 ரன்களும், யாதவ் 36 ரன்களும், ரோஹித் சர்மா 36 ரன்களும் எடுத்துள்ளனர். ராஜஸ்தான் அணியின் செளலா மூன்று  விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 211 என்ற வலுவான இலக்கை நோக்கி மும்பை அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே தொடக்க ஆட்டகாரர் நரேன் ஆட்டமிழந்தார். அந்த அணி இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. 211 ரன்கள் என்ற இலக்கை தொடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்