செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (12:27 IST)

பாக்ஸிங் டேயில் இந்தியா நிதானம் – மயங்க் அகர்வால், புஜாரா அரைசதம்

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலலாம பாக்ஸிங் டே டெஸ்ட் மேட்ச்சில் இந்தியா முதல் நாள் ஆட்டமுடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது.

இன்று  மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடர்ந்து சொதப்பி வந்த ராகுல், விஜய் இருவரையும் போட்டியில் இருந்து நீக்கிவிட்டு புதுமுக வீரர் மயங்க் அகர்வால் மற்றும் பின்வரிசையில் களமிறங்கிய ஹனுமா விஹாரி இருவரையும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறக்கினார்.

 ஆமை வேகத்தில் ஆட்டத்தைத் தொடங்கிய இருவரும் பொறுமையாக விளையாடி வந்தனர். இந்த ஜோடி ரன்கள் சேர்த்திருந்த போது ஹனுமா விஹாரியைக் கம்மின்ஸ் அவுட் ஆக்கினார். ஹனுமா விஹார் 66 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்தார். அதன்பிறகு மயங்க் அகர்வாலோடு புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரில் மயங்க் கொஞ்சம் அதிரடி காட்ட புஜாரா வழக்கம்போல நங்கூரம் பாய்ச்சினார். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் தனது முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய 76 ரன்களில் கம்மின்ஸ் பந்தில்  விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பிறகு களம் கண்ட கோஹ்லி புஜாராவோடு சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் விளையாடிய புஜாரா அரைசதம் அடித்தார். ஆட்டநேர முடிவில் புஜாரா 68 ரன்களோடும் கோஹ்லி 47 ரன்களோடும் களத்தில் உள்ளனர். இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களோடு வலுவான நிலையில் உள்ளது.