செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 மே 2022 (07:28 IST)

தோல்வி அடைந்தாலும் ஜோஸ் பட்லருக்கு குவிந்த விருதுகள்!

Butler
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனையடுத்து அந்த அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 இந்த நிலையில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் ஜோஸ் பட்லருக்கு விருதுகள் குவிந்தது. இந்த தொடரில் அதிக ரன்கள் அதாவது 863 ரன்கள் அடித்ததால் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விருது ஜோஸ் பட்லருக்கு கிடைத்தது,
 
மேலும் இந்த தொடரில் பட்லர் 84 பவுண்டரிகள் மற்றும் 45 சிக்சர் அடித்தால் அதிக பவுண்டரிகள் அடித்த விருதும் கிடைத்தது.
 
அதுமட்டுமின்றி தொடர் நாயகன் விருதையும் ஜோஸ் பட்லர் தட்டி சென்றார். இருப்பினும் தனது அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்ற ஆதங்கம் தனக்கு இருப்பதாக ஜோஸ் பட்லர் பேட்டியில் தெரிவித்துள்ளார்