1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:57 IST)

கிரிக்கெட்டில் அமித்ஷா மகனுக்கு புதிய பதவி: சவுரவ் கங்குலி வாழ்த்து!

கிரிக்கெட்டில் அமித்ஷா மகனுக்கு புதிய பதவி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா ஏற்கனவே பிசிசிஐ செயலாளராக இருந்து வரும் நிலையில் தற்போது அவருக்கு கூடுதலாக ஒரு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக அவர் நேற்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 
 
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜ்முல் ஹசன் பபான் என்பவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த நிலையில் நேற்று புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா அவர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
ஆசிய கிரிக்கெட் போட்டியை நடத்தும் பொறுப்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியை ஏற்றவுடன் அமித் ஷாவின் மகன் ஜெயிச்சா கூறியபோது, ‘ஆசிய மண்டலத்தில் கிரிக்கெட்டை இன்னும் ஆழமாக வேரூன்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆசிய கிரிக்கெட் போட்டி நடைபெறாத நிலையில் விரைவில் அடுத்த அடுத்த ஆசிய கிரிக்கெட் போட்டி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்