ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (22:47 IST)

பாஜகவில் இணைந்த மம்தா கட்சியின் மூன்று முன்னாள் அமைச்சர்கள்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இருந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள் இன்று திடீர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்களான ரஜிப் பானர்ஜி, ருத்ரானில் கோஷ் மற்றும் ரத்தின் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் இன்று பாஜகவில் இணைந்து உள்ளனர் 
 
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர்கள் பாஜகவில் இணைந்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை அவர்கள் பெற்றுக் கொண்டனர். மூன்று முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் இணைந்திருப்பது மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது