செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:19 IST)

ஐபிஎல்லில் புதிதாக சேரும் இரண்டு அணிகள் பெயர் என்ன? – 6 நகரங்கள் பெயர் பரிந்துரையில்..!

ஐபிஎல் போட்டிகளில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ள நிலையில் அவற்றிற்கான பெயர் பரிந்துரைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் புதிதாக இரண்டு அணிகளை சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏறத்தாழ அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் அணிகளுக்கு நகரத்தின் பெயர் வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக 6 நகரங்களின் பெயர் பரிந்துரையில் உள்ளது.

கவுஹாத்தி, ராஞ்சி, கட்டாக், அகமதாபாத், லக்னோ, தர்மசாலா உள்ளிட்ட 6 நகரங்களிலிருந்து இரண்டு நகரங்களின் பெயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.