1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (19:05 IST)

6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 191 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்த் நிலையில் இங்கிலாந்து அணி 290 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுத்த நிலையில் 368 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.சற்றுமுன்னர் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் அந்த அணி இன்னும் 219 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கேப்டன் ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர் இந்த 2 விக்கெட்டை வீழ்த்தி விட்டால் இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுவது உறுதி என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்