வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (16:33 IST)

இறுதி போட்டிக்கு நேற்றைய டிக்கெட் இன்று செல்லாதா? ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சி அறிவிப்பு..!

ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடக்க இருந்த நிலையில் மழை பெய்ததால் இன்று ஒத்திவைக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து நேற்றைய தேதிக்கான டிக்கெட் வாங்கியவர்கள் அந்த டிக்கெட் கிழிந்து இருந்தாலும் தகவல்கள் அழிக்கப்பட்டு இருந்தாலும் டிக்கெட் செல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு டிக்கெட் வாங்கிய பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்றைய போட்டிக்கான டிக்கெட் மழையால் கிழிந்து இருந்தாலும் முக்கிய தகவல்கள் அதில் இடம்பெறாமல் இருந்தாலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வரும் தகவலில் உண்மை இல்லை என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
நேற்றைய டிக்கெட்டில் உள்ள தகவல்கள் இல்லாமல் இருந்தாலோ அல்லது பாதி டிக்கெட் அல்லது மொபைல் போனில் டிஜிட்டல் டிக்கெட் மற்றும் எடுத்துக் கொண்டு வந்தாலோ மைதானத்திற்கு செல்ல ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
டிக்கெட் முழுமையாக, பாதிப்பு இல்லாமல் அனைத்து தகவல்களும் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் கூறி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran