நல்லவேளை இந்த காயத்தோட் போச்சே: கிரிக்கெட் வீராங்கனை வனிதா


sivalingam| Last Modified சனி, 7 அக்டோபர் 2017 (00:19 IST)
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை வேலுச்சாமி வனிதா சமீபத்தில் ஒரு போட்டியில் விளையாடியபோது ஹெல்மெட் இல்லாமல் விளையாடியதால் அவரது உதட்டில் பந்து விழுந்ததால் காயம் அடைந்தார்


 
 
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியபோது, 'நல்லவேளை உதட்டில் சிறு காயத்தோடு போனது. ஹெல்மெட் இல்லாமல் விளையாடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டேன்' என்று கூறியுள்ளார்
 
மேலும் அவரது காயம்பட்ட உதட்டோடு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :