1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (16:28 IST)

ஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடாது – பிசிசிஐ நெருக்கடி !

பாகிஸ்தானில் நடக்க இருக்கும் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய விளையாடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய அணிகளுக்குள் நடத்தப்படும் ஆசியக் கோப்பை போட்டி இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகமுறைக் கோப்பையினை வென்ற அணியாக இந்தியா இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஆசிய கிரிகெட் வாரியம் (ACC) முடிவுசெய்துள்ளது. அரசியல் காரணங்களால் இரு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் இதுவரை விளையாடாமல் உள்ளன. ஆனால் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மோதி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானில் நடக்கும் தொடரில் இந்தியா விளையாடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா இல்லாமல் ஆசியக் கோப்பை நடைபெறுமா அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.