ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2020 (15:45 IST)

இந்தியாவில் பரவியது கொரோனா வைரஸ்... அறிகுறிகள் என்ன ?

சீனாவில் கொரனா வைரஸால் இது வரை 132 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அங்கு 3,554 பேருக்கு கொரனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடையும் எனவும், இன்னும் 10 நாட்களில் வைரஸ் தாக்குதல் வீரியம் அடையும் எனவும் மருத்துவ நிபுணர் குழு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
 
சீனாவில் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல், பல நாடுகளைத் தாண்டி இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும்  மருத்துவர் தெரிவித்துள்ளார்.
 
சீனாவில் வுஹான் பல்கலைப் பழகத்தில் பயின்ற மாணவருக்கு கொரானா தாக்குதல் இருப்பது உறுதியான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் கேரளாவில் 806 பேருக்கு  கொரனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தென்படுவதால் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் அறிகுறிகள், காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கும், வறண்ட இருமல் 7லிருந்து 12 நாட்கள்,நுரையீரல் பாதிப்பு, வாயு வெளியேற்றம் , பேதி, உடல் வலி ஆகியவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது எளிதாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கினால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
 
இதற்கான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் இது மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.