1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (16:21 IST)

டி20 போட்டியிலாவது இலங்கை வெற்றிபெறுமா? இல்லை இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒரு 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.


 
 
இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. 
 
நாளைய 20 ஓவர் போட்டியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை காட்டவுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி 20 ஓவர் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கத்தில் உள்ளது.
 
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 10 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.