செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (22:24 IST)

ஐந்தையும் சொளையாக அள்ளிய இந்தியா: சொந்த மண்ணில் தொடரும் இலங்கையின் சோகம்

இலங்கைக்கு எதிரான 4 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, இன்று நடந்த ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் சொளையான ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளது.


 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. திருமன்னே 67 ரன்களும் மாத்யூஸ் 55 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்குமார் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்/
 
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது. விராத்கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.