செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (22:31 IST)

இந்தியாவுக்கு மேலும் ஒரு தோல்வி: தொடரில் இருந்து வெளியேறுகிறதா?

இந்தியாவுக்கு மேலும் ஒரு தோல்வி: தொடரில் இருந்து வெளியேறுகிறதா?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம் 
இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 111 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதும் இந்திய அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மிக அபாரமாக வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை கொடுத்த இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை சொல்ல முடியும்