திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (10:38 IST)

ஒலிம்பிக்கில் இந்தியாவை உயர்த்துவது இலக்கு! – குத்துசண்டை சாம்பியன் தஜாமுல் இஸ்லாம்!

உலக குத்துச்சண்டை போட்டியில் வென்ற தஜாமுல் இஸ்லாம் ஒலிம்பிக்கில் சாதிப்பது லட்சியம் எனக் கூறியுள்ளார்.

14வயதிற்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தஜாமுல் இஸ்லாம் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தஜாமுல் இஸ்லாமின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனது வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தஜாமுல் இஸ்லாம் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வென்று இந்தியாவை உயர்த்துவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.