புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (22:45 IST)

மகளிர் கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்து விரைவில் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் இந்த இரு நாடுகளின் மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வருகிறது 
 
 
இந்த நிலையில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் இன்று சூரத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இத்னையடுத்து இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது 
 
 
இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்தது. கேப்டன் கவுர் 43 ரன்களும், மந்தனா 21 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 131 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதனையடுத்து இந்திய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருதினைப் பெற்றார். அவர் 4 ஓவர்களில் 3 மெய்டன்களை வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது