1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (17:26 IST)

மறக்க முடியாத நாள்!!: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெருமிதம்

12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் முதன்முறையாக நடத்தப்பட்ட உலககோப்பை டி20ல் இந்தியா வெற்றிபெற்றதை இன்று இந்திய வீரர்கள் நினவு கூர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.

2007ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரில் டி20 என்ற 20 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதன்முறையாக தொடங்கும் ஆட்டம் என்பதால் இதில் கோப்பையை பெறுவது வரலாறு முழுவதும் பேசப்படும் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது.

இந்திய அணி இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி அனைத்து நாடுகளையும் வெற்றி கொண்டு இறுதி போட்டியில் வந்து நின்றது பாகிஸ்தானிடம்! பாகிஸ்தான் vs  இந்தியா போட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? கடுமையான இறுதி போட்டியை உலகமே ஆரவாரத்துடன் பார்த்தது.

முதலில் பேட்டிங்கில் இறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடியும் வரை நின்று விளையாடி 157 ரன்களை பெற்றது. இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தானை தனது அபாரமான பந்துவீச்சால் 152 ரன்களில் விக்கெட்டை மொத்தமாக காலி செய்து வெற்றியை கைப்பற்றியது இந்தியா. மேன் ஆஃப் தி மேட்ச் இர்ஃபான் பதானுக்கு கிடைத்தது. உலகமே இந்தியாவை அதிசயித்து பார்த்த தருணங்களில் உலக கோப்பை டி20யும் ஒன்று!

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் அதை சிறப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்களும், ஐசிசி அமைப்பும் கோப்பை வென்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதை ரசிகர்களும் #INDvPAK என்ற பெயரில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.