திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 மே 2018 (23:36 IST)

ஐதராபாத் அணி அபார வெற்றி: டெல்லி பரிதாபம்

இன்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் எடுத்த நிலையில் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கியது ஐதராபாத் அணி
 
ஐதராபாத் அணியின் ஹேல்ஸ் 45 ரன்களும், தவான் 33 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 32  ரன்களும் எடுத்த நிலையில் இறுதியில் 20 ஓவர்களில் ஐதராபாத் அணி  19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. தோல்வி அடைந்த டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்தது