திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (10:04 IST)

'மாஸ்டர்’ பட பாடலுக்கு ஆட்டம் போட்ட ஹர்பஜன்சிங்! வீடியோ வைரல்

தளபதி விஜய் நடித்த வெற்றி திரைப்படமான 'மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது என்பதும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே 
 
இந்த பாடலுக்கு உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் ஆட்டம்போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் 'மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
மேலும் ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து தனது மகிழ்ச்சியை அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஹர்பஜன்சிங் இந்த ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்