வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (23:25 IST)

55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை படுதோல்வி.. குஜராத் அபார வெற்றி..!

Mumbai Indians
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அபாரமாக விளையாடிய 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்தது. தொடக்க ஆட்டக்காரர்  சுப்மன் கில் 56 ரன்கள் அடித்தார். 
 
இந்த நிலையில் 208 என்ற விளக்கத்தை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் ஒன்பது கட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
 
போட்டியின் முடிவுகள் குஜராத் அணியை 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் மும்பை அணி 6 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva