1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:45 IST)

பந்தை சாப்பிடுவதில் யார் ஸ்பெஷலிஸ்ட்? – வென்று காட்டிய ஹைதராபாத் அணி!

SRH DC
ஐபிஎல் போட்டியில் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நேற்று போட்டி நடைபெற்றது.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. தற்போதைய நிலவரப்படி ஐபிஎல் புள்ளி பட்டியலில் இறுதியில் உள்ள இந்த இரு அணிகளுமே மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டி யார் இன்னும் மோசமாக விளையாட போகிறார்கள் என்ற வகையிலேயே அமைந்தது. டாஸ் வென்று பேட்டிங்கில்ம் இறங்கிய டெல்லி அணி மொத்த ஆட்டத்திற்கே 2 சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்டது. ஓடி ஓடியே ரன் சேர்த்துக் கொண்டிருந்தாலும் அவ்வபோது விக்கெட்டுகளும் வீழ்ந்து கொண்டே இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது டெல்லி.

ஆனால் அடுத்து இறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் டெல்லி தேவலாம் போல என்ற வகையில் அமைந்தது. மயங்க் அகர்வாலும்(49), க்ளாசனும் (31) மட்டும் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்தை கொடுத்தனர். மொத்த ஆட்டத்திலுமே க்ளாசன் அடித்த ஒரே ஒரு சிக்ஸ் மட்டும்தான் இருந்தது. எல்லாரும் அடித்த பந்தை விட குறைவான ரன்களையே எடுத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் சோர்வு ஏற்பட்டாலும் கடைசி ஓவரில் ஒரு த்ரில் இருந்தது.

6 பந்துகளில் 15 ரன்கள் என்ற நிலையில் கூட வாஷிங்க்டன் சுந்தர், ஜேன்சனால் அதை சேஸ் செய்ய முடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தனர். ஒப்பனிங் வீரரான ஹேரி ப்ரூக் 14 பந்துகளுக்கு 7 ரன்கள் என அடித்தபோதே பலரும் நம்பிக்கை இழந்து விட்டனர். தற்போது புள்ளி பட்டியலில் யார் கடைசி என்ற போட்டியில் சன்ரைசர்ஸ் கடைசி இடத்தை அடைந்துள்ளது.