புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (13:26 IST)

20 வருடமாக இந்தியாவை ஜெயிக்க முடியாத இங்கிலாந்து- இன்றைய நிலை என்ன?

உலக கோப்பை தொடரின் 38வது ஆட்டமான இன்றைய ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளுமே சரிசமமான அணிகள் என்பதால் யார் வெற்றிபெறுவார்கள் என்று ரசிகர்களிடையே அதிர்பார்ப்பு எல்லை மீறி இருக்கிறது.

இதற்குமுன் விளையாடிய ஆட்டங்களில் ஒருமுறை கூட தோற்கவில்லை என்பதால், இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதோடு, தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுவிடும்.

அதேசமயம் இங்கிலாந்துக்கு இது வாழ்வா? சாவா? ஆட்டம்தான். அருமையாக விளையாடி வந்த இங்கிலாந்து அணி கடைசி இரண்டு ஆட்டங்களில் சொதப்பியதால் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து ஆறாவது இடத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பு இங்கிலாந்துக்கு ஓரளவு நெருக்கமாக இருக்கும்.

பலமுறை இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றாலும் ஒருமுறை கூட சொந்த நாட்டில் வெற்றிபெற முடுயவில்லை என்ற அவப்பெயர் இங்கிலாந்துக்கு இருந்து வருகிறது. மேலும் கடந்த 1992ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஒருமுறைக்கூட இங்கிலாந்தால் இந்தியாவை தோற்கடிக்க முடியவில்லை. தன்னை அடிமைப்படுத்திய நாட்டை ஒவ்வொரு உலக கோப்பையிலும் தன்னிடம் பணிய செய்வதில் இந்தியா மாஸ் காட்டுகிறது. இந்த முறையாவது இந்தியாவை வெற்றிபெற வேண்டும் என பல வியூகங்களை வகுத்து கொண்டே இங்கிலாந்து களம் இறங்குகிறது. இன்றைய ஆட்டம் இன்னொரு வரலாறு!