புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (09:59 IST)

பெஸ்ட் டைவ் கேட்ச் யாருடையது? தோனி vs சர்ஃபராஸ்: கொளுத்தி விட்ட ஐசிசி!

தோனி மற்றும் பாக். கேப்டன் சர்ஃபராஸ் ஆகிய இருவரில் பெஸ்ட் டைவ் கேட்ச் யாருடையது என கேட்டு ஐசிசி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. 
 
தோனி மற்றும் பாக். கேப்டன் சர்ஃபராஸ் ஆகிய இருவரில் சிறந்த டைவ் கேட்ச் யாருடையது என கேட்டு ஐசிசி டிவிட்டரில் பதிவிட்டதால், இதற்கு ரசிகர்கள் பலர் சுவாரஸ்யமாக பதில் அளித்து வருகின்றனர். 
 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானப் போட்டியின் போது தோனியின் டைவ் கேட்ச் ஒன்று வைரலானது. இந்த கேட்ச் நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பிடித்த கேட்ச்சும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்தது. 
எனவே, ஐசிசி இரண்டு கேட்ச்களின் வீடியோக்களை வெளியிட்டு இதில் சிறந்தது எதுவென கேட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலர் தோனியின் கேட்ச்தான் பெஸ் என கூற, ஒருவர் சற்று வித்தியாசமாக கேட்ச் பிடித்த பின்னர் தோனி சாதாரணமாக எழுந்து நடந்து சென்றார், ஆனால் சர்ஃபராஸ் கேட்ச் பிடித்துவிட்டு எழவே கஷ்டப்பட்டானர். எனவே தோனிதன பெஸ் என பதிவிட்டுள்ளார்.