வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2020 (08:03 IST)

ஸ்மார்ட் வாட்ச் அணியக் கூடாது – இங்கிலாந்து வீரர்களுக்குத் தடை!

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளின் போது ஸ்மாட் வாட்ச் அணிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் தங்கள் கைகளில் ஸ்மார்ட் வாட்ச்களை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்மார்ட் வாட்ச்களின் மூலம் வீரர்கள் சூதாட்டங்களில் ஈடுபடலாம் என்பதே. ஆனால் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு போட்டிகளின் போது நடந்த சில குளறுபடிகளால் இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.