1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (09:30 IST)

நான் நிதி கொடுத்தேன்! ஆனா எவ்வளவுன்னு சொல்ல மாட்டேன்! – எஸ்கேப் ஆன கோலி!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விராட் கோலி நிதி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேசன் பொருட்கள் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்காக நிதி தர விரும்பும் மக்கள் பிரதமரின் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்களும் தொடர்ந்து நிதிகளை அளித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் பிரதமரின் கணக்கில் நிதி தொகையை அளித்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டரில் தெரிவித்த கோலி, மற்றவர்களும் ஏழை எளிய மக்களுக்கு உதவ நிதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எவ்வளவு நிதியளித்தார் என்பதை குறிப்பிடவில்லை. சமீபகாலமாக பல நடிகர்கள், பிரபலங்கள் நிதியளித்து வரும் நிலையில் அவர்களது நிதி தொகை குறைவானதாக இருந்தால் சர்ச்சையை ஏற்படுத்துகிறது என்பதால் கோலி அதை தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.