செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (19:53 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!

eng vs afg
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது
 
இதனை அடுத்து 113 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது
 
5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran