செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (17:54 IST)

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் வீராங்கணைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு புல்லேலா கோபிசந்த் நடத்தும் பேட்மின்டன் அகாடமிக்கு சேரும்.
 
இந்த அகாடமி தெலங்கானாவில் உள்ளது. இங்குதான் சாய்னா நேவால், பிவி சிந்து, கிடம்பி ஸ்ரீகாந்த், காஸ்யப், பினராய் விஜயன், சமீர் வெர்மா ஆகியோர் பயிற்சி பெற்றனர். 
 
இந்நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்த் போட்டிக்காக தற்போது முதலே கோபிசந்த் அகாடமி ஆயத்தமாகி வருகிறது. 
 
இதன் ஒரு பகுதியாக வீரர் வீராங்கணைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் நல்ல உணவுகளை உட்கொள்ளவும், சிறப்பு உணவு முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பானில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஜப்பான் முட்டைகள் ஏன் என்றால், இந்த முட்டையிடும் கோழிகளுக்கு எந்த ஒரு நோய் எதிர்ப்பு ஊசி போடப்படுவதில்லை, முற்றிலும் இயற்கையாகவும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.