பவுலிங்கில் கலக்கும் தோனி: வைரல் வீடியோ!!

Last Updated: ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (13:11 IST)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

போட்டிக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படும் தோனி பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.

90 டெஸ்ட், 309 ஒருநாள் மற்றும் 83 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, டெஸ்ட் போட்டியில் 16 ஓவர்களும், ஒருநாள் போட்டியில் 6 ஓவர்களும் வீசியுள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டியில் பந்து வீசியது கிடையாது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கிடையில் தோனி ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவாரா? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :