Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் சி.எஸ்.கே அணியில் தல தோனி: உற்சாகத்தில் ரசிகர்கள்

Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (15:37 IST)
ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி குறித்த விதிமுறைகளை வகுக்க இன்று ஐபிஎல் நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நீதிமன்றத்தின் தடைக்காலம் முடிவடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் அணிகள் களமிறங்கவுள்ளன. ஆனால் அந்த அணிகளுக்கு ஏற்கனவே இருந்த வீரர்கள் கிடைப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரு அணிகளும் ஏற்கனவே வைத்திருந்த 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே தோனி, சுரேஷ் ரெய்னா, மெக்கல்லம் உள்பட முக்கிய வீரர்களை தக்க வைத்து கொள்ளும் வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்துள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :