1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:41 IST)

சிதம்பரம் அருகே விவசாயிகளைக் கடித்த முதலைகள்!

சிதம்பரம் அருகருகே இரு இடங்களில் முதலைகள் இரு விவசாயிகளைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற பகுதியில் உள்ள பனங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் வாய்க்காலில் முகம் கழுவும்போது அங்கிருந்த முதலை அவரின் முகத்தில் கடித்துள்ளது. இதையடுத்து அவர் கூச்சல் போடவே அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வனத்துறையினர் வந்து அந்த முதலையைக் கைப்பற்றினர்.

இதேபோல சிதம்பரம் அருகே குமராட்சி அருகே மாரியப்பன் என்பவர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அவரை முதலை வயிறு மற்றும் தொடைப் பகுதியில் கடித்துள்ளது. அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.