செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (20:33 IST)

நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான யஷ்வேந்திர சஹால் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் யஷ்வேந்திர சஹால். இதுவரை 52 ஒருநாள் போட்டிகளிலும் 42 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ள அவருக்கு 29 வயதாகிறது. இதையடுத்து அவருக்கு இப்போது தனஸ்ரீ வெர்மா என்ற பெண்ணோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமக்கள் இருவரின் புகைப்படத்தை சஹால் வெளியிட்டுள்ளார்.