திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (17:04 IST)

ஐபிஎல்தான் உங்களை வெளி உலகுக்கு காட்டியது… சூரியகுமார் யாதவ்& இஷான் கிஷானை வறுத்தெடுத்த முன்னணி வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தற்போது மோசமான பார்மில் விளையாடி வருகின்றனர்.

ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்தனர். இவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய சிறப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணியில் இடம் பிடித்தனர். ஆனால் இந்திய அணியில் இடம் கிடைத்த பின்னர் முற்றிலுமாக பார்மை இழந்துவிட்டனர்.

இதுகுறித்து பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா ‘இந்திய அணிக்கு தேர்வாகியதால் இருவரின் ஆட்டத்திறனும் பின் தங்கியிருக்கலாம். கடந்த காலை பெருமைகளிலேயே பல வீரர்கள் திளைத்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்தான் உங்களை அடையாளம் காட்டியது. இவர்கள் இருவரை  விட சௌரவ் திவாரி அதிக ஆர்வத்தோடு விளையாடுகிறார். சூர்யகுமாரும், இஷான் கிஷானும் தொழில் நேர்த்தியுடன் விளையாடி மும்பை அணியை மேலே கொண்டுவரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.