செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:57 IST)

கடைசி இரண்டு டெஸ்ட்களில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் –அதிர்ச்சியில் இங்கிலாந்து ரசிகர்கள்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. அதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்து நடக்க இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அந்த அணியின் துணை கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

குடும்ப விவகாரம் காரணமாக நியுசிலாந்து செல்ல வேண்டி இருப்பதாக தான் விலகிகொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.