செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:56 IST)

சேப்பாக்கம் மைதானத்தில் தோனி படை – அமீரகம் செல்வதற்கு முன் சென்னையில் பயிற்சி!

ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடக்க இருக்கும் நிலையில் சென்னை அணி வீரர்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை வந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக இந்தியாவில் இருக்கும் வீரர்கள் அனைவரும் வரும் 21 ஆம் தேதிக்குப் பிறகு அமீரகம் செல்ல உள்ளனர். இதையடுத்து சென்னை அணியினர் வரும் ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. இதற்காக விரைவில் தோனி உள்ளிட்ட சி எஸ் கே வீரர்கள் சென்னை வர உள்ளனர்.