நோ பிரஸ் மீட… கோலிக்கு தடை விதித்த பிசிசிஐ!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தக் கூடாது என பிசிசிஐ வாய்வழியாகக் கூறியுள்ளதாம்.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள கோலி அங்கு எந்த பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்ததும் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிகிறது.