இது டெஸ்ட் ஒருநாள் போட்டியில்லை; அதிரடி காட்டிய விராட் கோலி

India
Last Updated: சனி, 2 டிசம்பர் 2017 (16:39 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க வீரர்களாக தவான் மற்றும் முரளி விஜய் களமிறங்கினர். தவான் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து முரளி விஜய்யுடன் ஓடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 
 
முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரும் சதம் விளாசினார். இருவரும் 150 ரன்கள் கடந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். முரளி விஜய் 153 ரன்கள் குவிருந்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ரஹானே  வந்த வேகத்தில் மைதானத்தில் விட்டு வெளியேறினார். விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் சர்மா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 
விராட் கோலி டெஸ்ட் போட்டி என்பதை மறந்து ஒருநாள் போட்டி போல் அதிரடியாக விளையாடினார். இலங்கை அணி பந்துவீச்சாளர்களை இந்திய அணி வீரர்கள் திணறடித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :