1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: 83 ரன்கள் பின் தங்கியிருக்கும் இலங்கை!

sl vs ban2
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: 83 ரன்கள் பின் தங்கியிருக்கும் இலங்கை!
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த இருபத்தி மூன்றாம் தேதி தொடங்கிய நிலையில் மூன்று நாட்களில் ஒரு இன்னிங்ஸ் கூட இன்னும் முடியாமல் இருப்பதால் இந்த டிராவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் 365 ரன்களுக்கு இழந்தது 
 
இதனையடுத்து இலங்கை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பதும் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று 4-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி மேலும் கூடுதல் ரன்களை சேர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்