செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு!

andrew symonds
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்கினார் 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து தாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 46
 
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து உருண்டதாகவும், இதனை அடுத்து ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காருக்குள்ளேயே உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்